india

img

ஏழுமலையான் கோயிலால் வேலைவாய்ப்புகள் பெருகும்... காஷ்மீர் துணை நிலை ஆளுநர் சொல்கிறார்.....

ஜம்மு:
காஷ்மீரில் கட்டப்படும் ஏழுமலையான் கோயிலால், வேலைவாய்ப்பு பெருகும், பொருளாதாரம் பெருகும் என்று ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறியுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் கிளை ஒன்றை, ஜம்மு - காஷ்மீரில் அமைக்க முடிவு செய்த, தேவஸ் தான நிர்வாகம், இரண்டு நாட்களுக்கு முன்பு அதற்கான பூமிபூஜையை நடத்தியது. இதில் கலந்து கொண்டு பேசுகையில்தான் ஆளுநர் மனோஜ் சின்ஹா இவ்வாறு பேசியுள்ளார்.“ஏழுமலையான் கோயில் கட்டப் படுவது, ஜம்மு - காஷ்மீருக்கு பெருமைக்குரிய மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக அமைந்துள்ளது. இந்த அற்புதமான தெய்வீக ஆலயப் பணிகள் நிறைவடையும் போது, விசுவாசத் தின் மையமாகவும், ஆன்மீகத்தின் இலக்காகவும் இருக்கும். ஆந்திராவைப் போலவே இங்கும் மருத்துவமனை வசதிகளையும் தேவஸ்தானம் அமைக்கவுள்ளது. இந்திய கலாச்சாரத்தின் அடித்தளத்தை வலிமைப்படுத்தவேத பாடசாலைகள் அமைக்கப்படுவது மிகவும் மகிழ்ச்சி. தற்போது இங்குகோயில் அமைக்கப்படுவதால் பல் வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் பெருகும். அது நிச்சயம் இந்த மண்டலத்தின் பொருளாதார நிலையை மாற் றும்” என்று சின்ஹா கூறியுள்ளார்.

;